Google தமிழ் கம்ப்யூட்டர் ப்ளாக் | எனக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுடன் பகிர்நது கொள்கிறேன்.

பழைமையான POST களை இலகுவாக Search செய்யும் வசதி Facebook ல்
பேஸ்புக்கில் ஒருவருடைய டைம்லைனில் நீண்ட காலத்திற்கு முன்னர் போஸ்ட் செய்யப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ஸ்கொரல் பார் (Scroll Bar) பயன்படுத்தப்படும்.

எனினும் இது நீண்ட நேரம் எடுக்கும் செயன்முறையாகும்.
ஆனால் தற்போது குறித்த ஒரு சொல்லினைக் கொண்டு பழைமையான போஸ்ட்களை இலகுவாக தேடிக்கொள்ளும் வசதி பேஸ்புக்கில் தரப்பட்டுள்ளது. 

இது பயனுள்ள வசதி ஆயினும் சில சமயங்களில் ஒருவருடைய குண நலன்களை இலகுவாக கண்டுபிடிக்கக்கூடியதாக இருப்பதால் தனி நபர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உங்களது மின்னஞ்சலில் Auto Replay System (தானாக பதிலளிக்கும் சேவை)யை GMAIL இல் பயன்படுத்துவத எப்படி ?நாம் இன்று பாா்க்க இருப்பது "மின்னஞ்சலில் Auto Replay System (தானாக பதிலளிக்கும் சேவை)யை GMAIL இல் பயன்படுத்துவத எப்படி ? " என்பதுதான்.

இந்த நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவருக்கும் மின்னஞ்சல் பற்றிய அறிவும் அனுபவமும் இருக்கும்.

நாம் ஏதாவது Company அல்லது சில வலைத்தளங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த கனமே ஒரு பதில் செய்தி வந்து விடும்.

இவ்வாறு நாமும் எமது மின்னஞ்சலில் எவ்வாறு செய்து கொள்வது என்பதைப் பற்றி பாா்ப்போம்.

01. முதலில் உங்களது  Gmail Account இனுள் நுழைந்து கொள்ளுங்கள். 

02.  பின்னா் Settings இனுள் செல்லுங்கள்

03. General => Vacation Responder


04. இதில் Vocation responder on என்பதில் Tick செய்து கொள்ளுங்கள். 

05. Last day இல் Tick செய்து விட்டு எக் காலப்பகுதி வரை உங்களுக்கு தேவை என Set செய்து கொள்ளுங்கள்.

06. Subject உங்களுக்கு வேண்டியது போல் அமைத்துக் கொள்ளுங்கள்.

07. எப்படி உங்களது Auto Replay Message செல்ல வேண்டும் என எழுதிக் கொள்ளுங்கள்.

08. Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.

இனி உங்களது Auto Replay System Activate ஆகி விட்டது.

இதனை Test செய்து பார்க்க உங்களுக்கு வேறு ஏதும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து Mail செய்து பாருங்கள்.இந்தப் பதிவை பகிர்ந்து மற்ற நண்பா்களும் பயன் பெற உதவி செய்யுங்கள்.
நன்றி
அன்புடன்
பஹாத்

அவதானமாக இருங்கள்! பேஸ்புக்கில் உலவும் புது விதமான ‘நிறம் மாற்றும்’ வைரஸ்நீங்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் எப்போதாவது உங்களுடைய நிறத்திட்டத்தை (Colour Scheme) மாற்ற முயற்சித்திருக்கிறீர்களா?
ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும். 

இந்த நிறம் மாற்றும் தீம்பொருள்தான் (Malware) இன்று ஃபேஸ்புக்கில் உலவும் புது விதமான வைரஸ். இதனால், உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 பேரின் ஃபேஸ்புக் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை ஃபேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் உருவாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் விளம்பரமாக தொடங்குகிறது. 

இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு திசைத்திருப்பப்படுகிறது. இங்குதான் வைரஸ் தாக்கும் ஆபாயம் ஏற்படுகிறது. ஃபேஸ்புக் கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப் பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும், பயன்பாட்டையும் திருடுகிறது. 

இந்த வைரஸின் தற்காலிக பயன்பாடு, அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களின் கணக்கையும் ஹாக்கர்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றது. 

ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம் அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது. 

"ஒருவேளை இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், அதனை உங்களுடைய கணினியிலிருந்தோ அல்லது ஸ்மார்ட்போனில் இருந்தோ நீக்கிவிட்டு, ஃபேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும்”, என்று சீனாவில் இணையம் நிறுவனமான ‘சீட்டா மொபைல்’ தெரிவிக்கின்றது.

ஒரே அழுத்துவையில் கணனியை ஆப் செய்ய வேண்டுமா? அப்போ இத படிங்க!


நாம் அனைவரும் நமது வேலையை கணனியில் தொடங்கும் முன் பவர் பொத்தானை பயன்படுத்துவோம்.

அதே சமயம் வேலையை முடிக்கும் போது அனைத்து விண்டோவையும் முறைப்படி மூடி விட்டு "Start" ஆப்ஸ்சனை கணனியில் தேடிக் கொண்டிருப்போம். ஏனெனில் ஷட்டவுன் பொத்தான் அங்கு தான் இருக்கும்.
இந்த விடயம் பலரையும் கடுப்பேற்றும் ஒன்றாக இருக்கும். 

இந்த காரணத்திற்காக பலரும் சில சமயங்களில் டிவியை போல் கணனியை ஆப் செய்து விட்டு ஓடிவிடுவார்கள். அதற்காக அவர்கள் தகுந்த பிரச்சனைகளை அவர்களது கணனியில் சந்திப்பார்கள்.

முன்பெல்லாம் கணனியை இது போன்று ஆப் செய்து விட்டு போனாலோ, அல்லது அனைத்து புரோகிராம்களை முறைபடி குளோஸ் செய்யாவிட்டாலும் அவர்களது கணனியில் பல சிக்கல்கள் தலையை எட்டிபார்க்கும்.

ஆனால் தற்போது உள்ள கணனிகளில் உள்ள முக்கியமான உறுப்புகள் மதர்போர்டு, கேபினட் போன்றவைகள் ATX வகையானதாக உள்ளது. அதனால் பிரச்சனைகள் வருவது குறைவாக உள்ளது.

வாங்க.. ஒரே கிளிக்கில் ஆப் செய்யலாம்

இந்த பிரச்சனையை கண்ட்ரோல் பேனலில் Power Options சென்று choose what the power button do என்பதினை கிளிக் செய்து, when i press the power button என்பதில் Shutdown என்பதினை தேர்ந்தெடுக்கலாம்.

  


 
மேலும் அதில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கும். Shutdown க்கு பதிலாக sleep, nothing என சில ஆப்ஸனும் இருக்கும்.

மடிக்கணனியில்

மேலும் மடிகணனியில் உள்ள Power Options மூலம் உங்கள் திரையை மூடுவதன் மூலம் உங்கள் கணனியை ஆப் செய்யலாம்.

இனி நீங்கள் அவசரமாக கணினியை ஷட்டவுன் செய்ய வேண்டுமெனில் பவர் பொத்தானை அழுத்தினால் மற்றும் திரையை மூடினால் போதுமானது. உங்களுடைய கணனி பாதுகாப்பாக ஷட்டவுன் ஆகிவிடும்.
  
நன்றி லங்கா ஸ்ரீ

எமது தளத்தில் புதிய ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

http://4.bp.blogspot.com/-d9PDqtel56M/U-Yx41KOmYI/AAAAAAAAAwY/oMYyzRJ6GdE/s1600/1.png அனைத்து நன்பர்களுக்கும் ஓர் நற்செய்தி. தற்போது எமது தளத்தினால் ஒரு புது முயற்சி கையாளப்பட்டுள்ளது. அதாவது உங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகங்கள் ஏற்பட்டால் அல்லது தொழில்நுட்பம் சம்பந்தமாக ஏதேனும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் எமது தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "கேள்வி பதில்" என்ற உதவி வலையில் நீங்கள் உங்கள் கேள்விகளை பதிவிடுவதன் மூலம் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அதற்குரிய விடையினை உங்களுக்கு வழங்கும் நோக்கில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பயனுள்ளதாக ஆக்குவதும் , பயனற்றதாக ஆக்குவதும் உங்கள் கையிலெ உள்ளது. இது ஒரு பொது நோக்கத்திற்காகவும் , அறிவினை பகிர்ந்து கொள்வதற்காகவுமே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் நீங்கள் உங்களத பதிலை கொடுக்கலாம்.

அந்த பதில் கேள்வி கேட்டவருக்கு பயனானதாக இருந்தால் அவர் உங்களது பதிலை Best Answer என Select செய்வார் மற்றும் உங்கள் பதிலுக்கு வாக்கு (Vote) அளிக்கும் System உம் இதில் இணைந்துள்ளது. இவ் வாக்குகள் நீங்கள் அதிகம் பெற்றால் இத்தளத்தில் நீங்கள் ஓர் முக்கிய புள்ளியாக காட்டப்படுவீர்கள்.

இதைப்பற்றி சொல்லப் போனால் சொல்லிக் கொண்டே போகலாம். 
இதில் எவ்வாறு இணைவது மற்றும் இதில் எவ்வகையான வசதிகள் உண்டு என்பதை கீழே நீங்கள் காணலாம்.

- இந்த தளத்தில் இணைவது எப்படி ? - 

http://1.bp.blogspot.com/-8wokyjzZFf0/U-ZIu7x3TJI/AAAAAAAAAws/xJntxc82Ufs/s1600/1.png
  • மேலே படத்தில் காட்டியவாறு Signup என்பதில் க்ளிக் செய்த பின்னா் கீழுள்ளவாறு ஒரு படிவம் தோன்றும் அதில் உங்கள் (உண்மையான) தகவல்களை பதிந்து கொள்ளுங்கள்


- இந்த தளத்தில் எவ்வாறு Login செய்து கொள்வது?  - 
  • மேலே படத்தில் காட்டியவாறு உங்களது மின்னஞ்சல் மற்றும் கடவுச் சொல் என்பவற்றினை உட்செலுத்தி Sign in எனபதனை அழுத்துங்கள்.
  • அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளஙகள் மூலம் Sign in செய்யும் வசதிகளும் உண்டு.
  • நீங்கள் உள்நுழைந்ததன் பின்னர் கீழுள்ளவாறு உங்களது செய்றபாடுகள் காட்டப்படும்.

- இந்த தளத்தில் எவ்வாறு கேள்விகளை கேட்பது ?  - 

http://3.bp.blogspot.com/-OxSxrtYb9OY/U-edbxNcq1I/AAAAAAAAAxo/Yj-nYikTEv8/s1600/5.png

- இந்த தளத்தில் எவ்வாறு பதிலளிப்பது ?  - 

இந்த தளத்தினை பயன்படுத்தி நல்ல பயன்களை பெற்றுக் கொள்ளுமாறு வாழ்த்துகிறேன். நன்றி.

இது சம்பந்தமான வேறு ஏதும் சந்தகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.